இந்தியா

குறைந்த தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

DIN

குறைந்த தொலைவு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் வகையிலான ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறைந்த தொலைவு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் வகையிலான இந்த ஏவுகணை சோதனையானது வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழுவதுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வகை ஏவுகணையானது 15 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT