இந்தியா

சோனியா காந்தி தலைமையில் காங். எம்.பி.க்கள் ஆலோசனை

DIN

குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்களை குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடைவிதித்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், அதிர் ரஞ்சன் செளத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT