சிங்கப்பூர் பயணிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு: மத்திய அரசு 
இந்தியா

சிங்கப்பூர் பயணிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு: மத்திய அரசு

கரோனா ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து இருந்து சிங்கப்பூரை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

கரோனா ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து இருந்து சிங்கப்பூரை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தற்போது தொற்றின் பரவல் குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நாட்டை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த கரோனா பரிசோதனை மற்றும் கட்டாயத் தனிமை உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் பின்பற்றப்பட உள்ளன.

மேலும் கடந்த திங்கள்கிழமை கானா மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகள் ஆபத்தான கரோனா பரவல் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் அப்பட்டியலில் இதுவரை 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல... தர்சனா ஸ்ரீபால்!

எண்ணங்களில் மிதந்து தன்னை அறிந்தவள்... இலாக்‌ஷி குப்தா!

டாடா சியரா: நவீன அம்சங்களுடன் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம்!

வாடிகனில் போப் 14-ம் லியோவுடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு!

எஸ்ஐஆருக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT