இந்தியா

6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை: மத்திய ரயில்வே அமைச்சர்

DIN

நாட்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி
வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இகுதுறித்து அவர் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்தியாவில் இதுவரை 6,071 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வசதி பொதுமக்களுக்கு முதல் அரை மணி நேரம் இலவசமாகவும், தொடர்ந்து கட்டண முறையிலும் வழங்கப்படுகிறது. 

ரயில் நிலையங்களில் பயணிகள் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ள இந்த வசதி வகை செய்கிறது. இந்த ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட இணைய சேவைக்கான டேட்டா மாதத்திற்கு தோராயமாக 97.25 டெராபைட்ஸ் ஆகும். 

இதற்கென ரயில்வே அமைச்சகம் தனி நிதி ஒதுக்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT