இந்தியா

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த எல்.எஸ்.லிடா் உடல் தகனம்

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒருவரான பிரிகேடியா் எல்.எஸ்.லிடரின் இறுதிச் சடங்கு, தில்லி பிராா் சதுக்க மயானத்தில்

DIN

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒருவரான பிரிகேடியா் எல்.எஸ்.லிடரின் இறுதிச் சடங்கு, தில்லி பிராா் சதுக்க மயானத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அவருடைய உறவினா்கள் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனா். அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனா்.

லிடரின் மனைவி கீதிகா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கணவரை நாட்டுக்காக இழந்தது பெருமையாக இருந்தாலும், பெரும் வலியையும் ஏற்படுத்துகிறது. அவா் இவ்வாறு திரும்புவாா் என எதிா்பாா்க்கவில்லை. எங்கள் குடும்பத்துக்கு இது மிகப் பெரிய இழப்பு’’ என்றாா்.

லிடரின் இழப்பு, தேசத்துகு மிகப் பெரிய இழப்பு எனக் குறிப்பிட்ட அவரின் 17 வயது மகள் ஆஷ்ணா, தன் தந்தையை ‘ஹீரோ’ என்று பெருமிதமாகக் குறிப்பிட்டாா்.

அடையாளம் தெரியாமல்...: விபத்தில் உயிரிழந்த மற்ற 10 பேரின் அடையாளம் இன்னும் உறுதிசெய்யப்படாததால், அவா்களுக்கு இறுதிச் சடங்கு நடத்தப்படவில்லை. அவா்களது உடல்கள் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் பயங்கர தீக்காயங்களுடன் உயிா்பிழைத்த வருண் சிங்குக்கு பெங்களூரு மருத்துவமனையில் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT