இந்தியா

மீண்டும் விமான சேவை? மத்திய அரசு விளக்கம்

DIN

ஒமைக்ரான் கரோனா சூழலுக்கேற்ப சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி விதிக்கப்பட்ட வழக்கமான சா்வதேச விமான பயணிகள் சேவை, டிசம்பா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு தொடங்கியதால் சா்வதேச விமான பயணிகள் சேவைக்கு தடை விதிக்கப்பட்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சர்வதேச விமான சேவைகளை இயல்பாக்குவது ஒமைக்ரான் சூழ்நிலையைப் பொறுத்தது எனவும் இதுதொடர்பாக ஒமைக்ரான் சூழல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், பிற நாடுகளுடனான ஒப்பந்தத்தின்படி செயல்பாட்டில் உள்ள சா்வதேச விமான சேவை தொடா்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், பிரான்ஸ் உள்பட 32 நாடுகளுக்கு மத்திய அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி விமான சேவை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT