இந்தியா

தில்லியில் நான்கு மாதத்தில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

DIN


புது தில்லி: புது தில்லியில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆக இருக்கும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

தலைநகர் புது தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 85 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்க அதிகமாகும். இதனால், கரோனா உறுதி செய்யப்படும் விகிதமும் 0.15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதில், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒமைக்ரான் நோயாளிகள் நான்கு பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 5 ஒமைக்ரான் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ஒமைக்ரான் பாதித்த 10 பேரில் யாருக்கும் பாதிப்பு கடுமையாகவில்லை. வெளிநாடுகளிலிருந்து தில்லி வரும் ஏராளமான பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT