முகப்பு
இந்தியா

தெலங்கானா: சிகிச்சைக்கு வந்தவரின் கிட்னியில் இருந்து 156 கற்கள் அகற்றம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  சிகிச்சைக்கு வந்தவரின் சிறுநீரகத்தில் இருந்து 156 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
156 கற்கள்
பகிர்:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  சிகிச்சைக்கு வந்தவரின் சிறுநீரகத்தில் இருந்து 156 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் ஹுப்லியைச் சேர்ந்த ஆசிரியரான பசவராஜ்(50) என்பவர் கடந்த சில நாள்களாக கடுமையான அடிவயிற்று வலியில் இருந்துள்ளார். பின் மருத்துவமனைக்குச் சென்ற போது அவருடைய சிறுநீரகத்தில் கற்கள் அடைத்திருப்பது கண்டறியப்பட்டது. 

இதனால் , மருத்துவர்கள் ஆலோசனையின் படி தெலங்கானாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று(டிச.16) மருத்துவர்கள் 3 மணி நேரம் லாப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்டவரிடமிருந்து 156 சிறுநீரகக் கற்களை அகற்றியிருக்கிறார்கள். 

சிகிச்சைக்குப் பின் நோயாளி நலமுடன் இருப்பதாகவும் இந்த நடைமுறையைப் பின்பற்றி நாட்டில் ஒரு நோயாளியிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவே முதல்முறை எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →