முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான்; மொத்த பாதிப்பு 15 ஆனது

கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 20 டிசம்பர், 2021 at 6:13 PM
கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான்; மொத்த பாதிப்பு 15 ஆனது
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:14 AM

கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 15 ஆக அதிகரித்திருப்பதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாநிலத்தில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 15 ஆனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், "திருவனந்தபுரத்தில் இரண்டு பேருக்கும், மலப்புரம் மற்றும் திரிச்சூரில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிரிட்டனிலிருந்து திருவனந்தபுரம் திரும்பிய 17 வயதுடைய நபர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் தனி விமானம் மூலம் துனிசியாவிலிருந்து வந்திந்தார். அவருக்கு வயது 44.

கேரளத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கடந்த 12-ம் தேதி கண்டறியப்பட்டது. அவர் பிரிட்டனிலிருந்து எர்ணாகுளம் திரும்பியவராவார். டிசம்பர் 15-ம் தேதி 4 பேருக்கும், வெள்ளிக்கிழமை 2 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கேரளத்தின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.