இந்தியா

சென்னை வழியே ஆந்திரம் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் உறுதி

DIN

சென்னை விமான நிலையத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்கு சென்ற வெளிநாட்டிலிருந்து வந்த பெண் பயணிக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி கென்யாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த 39 வயதுடைய பெண், திருப்பதிக்கு கார் மூலம் வந்தார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது டிசம்பர் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரின் மாதிரியை பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இதன்மூலம், ஆந்திரத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT