காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியின் மக்களவை எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார்.  
இந்தியா

காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திப்பு

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியின் மக்களவை எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார். 

DIN

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியின் மக்களவை எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார். 

குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கிய  நிலையில் அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே இன்று(டிச.22) நிறைவுற்றது. 

கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் மசோதா, தேர்தல் சட்டத் திருத்த மசோதா, பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அதேநேரத்தில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம், லக்கிம்பூர் விவகாரம், தேர்தல் திருத்த மசோதா, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்னைகளை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியின் மக்களவை எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார். 

குளிர்கால கூட்டத்தொடரின் போது எம்.பி.க்கள் முன்னெடுத்துப் பேசிய பிரச்சனைகள் குறித்தும் அவர்களுடன் விவாதித்தார்.

தேசிய பிரச்னைகளை அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்களிடம் கொண்டு செல்லுமாறும் எம்.பி.க்களை சோனியா  காந்தி கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT