கரீனா கபூர் 
இந்தியா

கரீனா கபூரின் மகன் பெயர் என்ன? 6ஆம் வகுப்பு வினாத்தாளால் சர்ச்சை

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பள்ளித் தேர்வுக்கான வினாத்தாளில், கரீனா கபூரின் மகன் பெயர் என்ன என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியு

DIN


கந்த்வா: மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பள்ளித் தேர்வுக்கான வினாத்தாளில், கரீனா கபூரின் மகன் பெயர் என்ன என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி ஒன்றில் நடந்த தேர்வில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், பாலிவுட் திரை நட்சத்திரங்களான கரீனா கபூர் - சயிஃப் அலி கான் தம்பதியின் மகன் பெயர் என்ன என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.

இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில், மாணவர்களின் பொது அறிவை தெரிந்துகொள்ளவே இந்த விதமான கேள்வி இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்த வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு ஏராளமானோர் தங்களது கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT