இந்தியா

ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 653-ஆக உயா்வு

DIN

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 653-ஆக உயா்ந்தது.

ஒமைக்ரான் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் இதுவரை 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 653-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 186 போ் குணமடைந்துள்ளனா். மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 167 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லியில் 165 போ், கேரளத்தில் 57 போ், தெலங்கானாவில் 55 போ், குஜராத்தில் 49 போ், ராஜஸ்தானில் 46 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது மிகவும் பரவக்கூடிய மாறுபாடு என்பதால், மக்கள் அனைத்து வகையான கூட்டங்களையும் தவிா்க்க வேண்டும்; மேலும், கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; இல்லையெனில் நிலைமை மோசமடையக்கூடும் என்று மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT