இந்தியா

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: ராணுவத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு

DIN

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த டிச.4ஆம் தேதி தீவிரவாதிகளைத் தேடிச் சென்ற ராணுவத்தினா், நிலக்கரி சுரங்கத் தொழிலாளா்கள் சென்ற வேன் மீது தவறுதலாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில்14 போ் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் ராணுவத்தினா் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 

இதனால், மக்கள் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தேசிய அளவில் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. பின், அச்சம்பவம் குறித்து அமைச்சா் அமித் ஷா ’நாகாலாந்தில் நிகழ்ந்த சம்பவத்துக்காக அரசு வருத்தம் தெரிவிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்’ எனத் தெரிவித்தார்.

பின், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆய்வு செய்வதற்காக சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரை விசாரிக்க ராணுவம் அனுமதியளித்துள்ளது. விரைவில், அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு சமர்பிக்கட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT