இந்தியா

உ.பி. தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அடுத்தாண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க | மீள்பார்வை 2021

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

லக்னெளவில் இன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மண்டல தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தேர்தல் ஆணையர்கள் ராஜிவ் குமார், அனுப் சந்திரா பாண்டே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோவாவிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, அங்கு செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

SCROLL FOR NEXT