இந்தியா

திருக்குறளை மேற்கோள் காட்டி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

மத்திய பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். 

DIN

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

என்ற திருவள்ளுவரின் திருக்குறளைக் கூறினார். 

'பொருள் வரும் வழிகளை மென்மேலும் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்' எனபதே இந்தக் குறளின் பொருள். 

திருவள்ளுவரின் இந்த குறளுக்கு இணங்கவே, மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

அதேபோல, 'நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு' என்று பொருள் படக்கூடிய 

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

என்ற குறளையும் மேற்கோள்காட்டி பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை பரிசளிக்கும்... அஸ்லி மோனலிசா

விழிகளின் தேடல்... ரிச்சா ஜோஷி

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

SCROLL FOR NEXT