நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 9.5% ஆக உயரும்: பட்ஜெட் 
இந்தியா

நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 9.5% ஆக உயரும்: பட்ஜெட்

நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

DIN

நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

 அதில் அவர் அறிவித்திருப்பதாவது, ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும்,  பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு   ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை  திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம்.

வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம்.

நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம்.

15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின்  அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT