முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 12,408 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
நாட்டில் கரோனா பாதிப்பு 1.08 கோடியாக அதிகரிப்பு
பகிர்:

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,408 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,08,02,591-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து புதிதாக 15,853 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  1,04,96,308-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கடந்த 24 மணிநேர்த்தில் புதிதாக 120 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,54,823-ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,51,460 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments