தீயில் சிக்கிய முதியவர்களை தோளில் சுமந்து வந்த தில்லி காவலர்; குவியும் பாராட்டு
தெற்கு தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பற்றிய தீயிலிருந்து முதிய தம்பதியைக் காப்பாற்றிய தில்லி காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தியாதீயில் சிக்கிய முதியவர்களை தோளில் சுமந்து வந்த தில்லி காவலர்; குவியும் பாராட்டு
தெற்கு தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பற்றிய தீயிலிருந்து முதிய தம்பதியைக் காப்பாற்றிய தில்லி காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
புது தில்லி: தெற்கு தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பற்றிய தீயிலிருந்து முதிய தம்பதியைக் காப்பாற்றிய தில்லி காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை நெருங்கிய போது, தீப்பற்றிய கட்டடம் மிகவும் உள்புறமாக இருந்ததும், அதன் முக்கிய நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்கலாமே.. பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள்
உடனடியாக காவலர் விக்ரம், அருகிலிருந்த கடையில் சுத்தியை வாங்கி வந்து பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்தனர். புத்திசாலித்தகமான வீட்டுக்குச் செல்லும் எரிவாயு குழாய் இணைப்பைத் துண்டித்தனர்.
மாடி வழியாக வீட்டுக்குள் குதித்த காவலர்கள், வீட்டுக்குள் இருந்த முதிய தம்பதியை வெளியே அழைத்துவந்தனர். அதில், வயதான பெண்மணியை தலைமைக் காவலர் விக்ரம் தனது தோளில் சுமந்து கொண்டு வந்து காப்பாற்றியுள்ளார்.
இருவரையும் காப்பாற்றிய காவலர்கள், உடனடியாக அருகிலிருந்த குடியிருப்புகளில் சிக்கியவர்களையும் மீட்டு உயிர்ச்சேதத்தை தவிர்த்தனர்.