இந்தியா

தேர்தல் காலம்: அசாமில் பெட்ரோல், டீசல், மதுபான விலைகள் குறைகின்றன

DIN


குவகாத்தி: விரைவில் சட்டபேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் அசாம் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறைகின்றன.

அசாமில் கரோனா தொற்றுப் பரவல் மற்றும் பொதுமுடக்கம் தீவிரமாக இருந்த காலத்தில், பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக ரூ.5ம், மதுபான விலையில் கலால் வரியை 25 சதவீதம் அதிகரித்தும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமுடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்புகளை திரும்பப் பெறுவதாக அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பேரிடரை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான வகைகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில், அதனை தொடர்வது நியாயமாக இருக்காது என்ற அடிப்படையில், அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் நாட்டிலேயே பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத்துக்கு அடுத்த இடத்தில் அசாம் இடம்பெறும். டீசல் விலையில் ஹரியாணா, இமாச்சலம், உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் அசாம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT