முகப்பு
இந்தியா

5 ரூபாய்க்கு உணவுத் திட்டம்: மம்தா அறிமுகம்

ஏழைகளுக்கு ரூ. 5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
கோப்புப்படம்
பகிர்:


ஏழைகளுக்கு ரூ. 5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தின்படி 5 ரூபாய்க்கு சாப்பாடு, பருப்பு, காய் மற்றும் முட்டை வழங்கப்படவுள்ளன. இதற்கான மானியமாக மாநில அரசு ஒரு உணவுக்கு ரூ. 15 செலுத்துகிறது. 

நாள்தோறும் பிற்பகல் 1 முதல் 3 மணி வரை சுய உதவிக் குழுவினர் சமையலறைகளைப் பராமரிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதும் இதற்கான சமையலறைகள் படிப்படியாக அமைக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →