முகப்பு
இந்தியா

ரூ.363 கோடியில் விளைபொருள்களை பதப்படுத்துதல் திட்டங்கள்

விவசாயிகளின் விளை பொருள்களைப் பதப்படுத்தவும், அவற்றை விற்பனை செய்யும் வரை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் ரூ.363.4 கோடி மதிப்பீட்டில் இரு வகையான 20 திட்டங்களுக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:



புது தில்லி: விவசாயிகளின் விளை பொருள்களைப் பதப்படுத்தவும், அவற்றை விற்பனை செய்யும் வரை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் ரூ.363.4 கோடி மதிப்பீட்டில் இரு வகையான 20 திட்டங்களுக்கு மத்திய வேளாண், உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை அனுமதியளித்தார்.

பிரதமரின் கிஸான் சம்பதா திட்டத்தின் கீழ் வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் கட்டமைப்புத் தொகுப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களை உருவாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் இரு குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார். இத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தேலி மற்றும் இத்திட்டத்தைச் செயல்படுத்துபவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ரூ. 363.4 கோடி மதிப்பீட்டில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு புதன்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பது: 

உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்கள்: இந்தத் திட்டத்தில் புதிதாக உருவாக்குதல் அல்லது விரிவுபடுத்துதல் திட்டங்களின் கீழ் ஹிமாசலப் பிரதேசம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கர்நாடகம், மிúஸாரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ரூ.113.08 கோடியிலான 11 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் ரூ. 36.30 கோடி மானியமும் அடக்கம். ரூ.76.78 கோடி வரை தனியார் முதலீடு வந்துள்ள இந்தத் திட்டங்கள் மூலம் 6,800 விவசாயிகள் பயனடைகின்றனர். இதன்மூலம் அவர்களது உணவுப் பதப்படுத்தும் அளவு அதிகரிக்கும். வேளாண் பொருள்கள் வீணாவதும் குறையும். மேலும், 3,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் கட்டமைப்பு தொகுப்பு: இந்தத் திட்டங்கள் மத்தியப் பிரதேம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 9 திட்டங்களுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், தனியாரின் முதலீடாக ரூ. 183.71 கோடி, மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.66.61 கோடி மானியம் என மொத்தம் ரூ. 250.32 கோடியில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்தக் கட்டமைப்பு தொகுப்புத் திட்டங்கள் மூலம் 36,000 விவசாயிகள் பயனடைவர் எனவும் 8,260 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments