மனோஜ் திவாரி 
இந்தியா

பெட்ரோல் விலை உயர்வைக் கிண்டலடித்த மனோஜ் திவாரி

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தனது சுட்டுரைப் பதிவில் கருத்துப் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.

DIN

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தனது சுட்டுரைப் பதிவில் கருத்துப் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த 9 நாள்களாக தொடர்ச்சியாக விலை உயர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐத் தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனோஜ் திவார் பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்துப் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார். 

அவர் தனது பதிவில், “என்ன ஒரு அருமையான பெட்ரோல் இன்னிங்ஸ். இந்தக் கடினமான சூழ்நிலையில் அடைந்த அருமையான சதம் இது. பெட்ரோலுடன் இணைந்து விளையாடிய டீசல் சிறப்பு. எளியமக்களுக்கு எதிராக இதனை அடைவது கடினம். ஆனால் நீங்கள் அதனை சாதித்துக் காட்டியுள்ளீர்கள்” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

SCROLL FOR NEXT