இந்தியா

விவசாயிகளுடன் தில்லி முதல்வர் ஆலோசனை

DIN


தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பாகவும், போராடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

விவசாயிகள் போராட்டத்துக்கு கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்குத் தேவையான குடிநீா், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜியாபாத் பகுதிகளில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சோ்ந்த விவசாயிகள் கடந்த 80 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT