பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கரோனா 
இந்தியா

மகாராஷ்டிரம்: பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வாஷிமில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் 229 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெர

IANS

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வாஷிமில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் 229 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

ரிசோட் தெஹ்ஸிலில் உள்ள டெகான் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் 229 மாணவர்கள், 4 ஆசிரியர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மேலும் தொற்று பரவாமல் தடுக்க வாஷிம் ஆட்சியர் சண்முகராஜன் நிலைமையைப் பார்வையிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். 

பள்ளியின் விடுதி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கரோனா நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அதிகாரி தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT