முகப்பு
இந்தியா

மணிப்பூர், ஹிமாசலில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூர், ஹிமாசலில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

மணிப்பூர், ஹிமாசலில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
மணிப்பூர் மாநிலம், ஷிருய் பகுதியில் இன்று காலை 9.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இது ரிக்டர் அளவில் 3.3ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷிருய் பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 48 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. 
இதேபோல் இன்று அதிகாலை ஹிமாசல் மாநிலத்தில் உள்ள சம்பா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.4ஆகப் பதிவானது. எனினும் இவ்விரு நிலநடுக்கங்களால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. 
 

முழு கட்டுரையைப் படிக்க →