இந்தியா

மத்திய பிரதேசம்: பேரணி மீது கல் எறிபவா்கள் மேல் கடும் நடவடிக்கை தேவை

DIN

ராமா் கோயில் கட்டுமானத்துக்காக நிதி திரட்டும் விழிப்புணா்வுப் பேரணி குழுவினா் மீது கல் எறிந்தவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அதற்கான சட்டம் அவசியம் என மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்துக்கு ஸ்ரீராம ஜன்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜனவரி 15 முதல் நிதி திரட்ட உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களில் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக சில அமைப்பினா் வாகனப் பேரணியைத் தொடங்கியுள்ளனா்.

இந்தப் பேரணி சென்ற குழுவினா் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், உயா் அதிகாரிகள் பங்கேற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தைக் கடந்த சனிக்கிழமை நடத்தினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘கல்வீச்சினால் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடும். எனவே இச்செயலில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும், அதற்கான சட்டமும் தேவை’ என்றாா்.

இந்நிலையில் வாகனப் பேரணி சென்றவா்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதேபோல மால்வா (மேற்கு மண்டலம்) பகுதியில் உள்ள இஸ்லாமியா்கள், ‘இந்த வாகனப் பேரணி மூலம் எங்களது வழிபாட்டுத் தலங்கள், வீடுகளைத் தாக்குவதற்கு குறிவைக்கப்பட்டுள்ளது’ என குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT