முகப்பு
இந்தியா

அமித் ஷாவின் மிசோரம் பயணம் ரத்து

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இரண்டு நாள் மிசோரம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:


உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இரண்டு நாள் மிசோரம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அமைச்சர் அமித் ஷா மிசோரம் மாநிலத்திற்கு செல்லவுள்ளதாக கடந்த 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மிசோரம் பயணத்தின்போது இந்தோ - மியான்மர் எல்லையிலுள்ள சாம்பாய் மாவட்டத்தை பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது.
 
இதேபோன்று வரும் 14-ஆம் தேதி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த அமித் ஷாவின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →