பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா 
இந்தியா

‘தேர்தலில் வென்றால் ரூ.18 ஆயிரம்’: மேற்கு வங்க பாஜக தலைவர் பேச்சு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு (2021) தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா,  “நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அகற்றப்பட்ட உடன் விவசாயிகளுக்கு உரியத் தொகை வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி புயல்... சுகானா கான்!

தீபாவளிச் சேலை... கரிஷ்மா டன்னா!

தீபாவளி மகிழ்ச்சி... ராய் லட்சுமி!

சித்திரமே சித்திரமே... அனன்யா பாண்டே!

ஹேப்பி தீபாவளி... அதிதி சர்மா!

SCROLL FOR NEXT