முடிவடையாத போராட்டம்: தில்லி எல்லையில் விவசாயி தற்கொலை
தில்லி டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஹரியாணா மாநிலம் ரோடக் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எந்தவித சமரசமும் ஏற்படாததால், 10 வது கட்டமாக இன்று (ஜன. 20) பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தில்லியின் டிக்ரி எல்லையில் போரட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜெய் பகவான் ராணா (42) என்ற விவசாயி சல்பாஸ் மாத்திரிகளை அதிக அளவு உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் அவர் உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதிவைத்துள்ளார். அதில், நான் ஒரு ஏழை விவசாயி. ஏராளமான விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
வேளாண் சட்டங்கள் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பிரச்சனை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு இயக்கமாக மாறவில்லை என்பது தான் சோகம். எனினும் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.