இந்தியா

குடியரசு தின விழா பேரணியை பார்வையிட 12-ம் வகுப்பு மாணவிக்கு அழைப்பு

DIN


குடியரசு தின விழாவில் பங்கேற்று பேரணியை பார்வையிட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடவும் அழைக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவி திவ்யாங்கி திரிபாதி 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 99.6 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

குடியரசு தினவிழாவில் பங்கேற்க அதிக அளவு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பிரதமர் மோடியுடன் அமர்ந்து பேரணியை பார்வையிடும் வாய்ப்பை மாணவி திவ்யாங்கி திரிபாதி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''இந்த அழைப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்து ஊக்கப்படுத்துவது அரசின் மிகச்சிறந்த நடவடிக்கை. வெவ்வேறு சமூகத்திலிருந்து எந்தவேறுபாடுமின்றி அனைத்து வகையான மாணவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. அரசின் இந்த அழைப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT