முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும்: ஆளுநர்

மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் (கோப்புப்படம்)
பகிர்:


மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி வரும் ஏப்ரல் மாத இறுதியுடன் முடிவடையவுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக பாஜக தலைவர்கள் மாநில பாஜக நிர்வாகிகளை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களை சந்திக்கும் வகையிலும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தொடர்ந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் அவ்வபோது இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் என்று உறுதியளிப்பதாக ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

நடுநிலையாகவும், வன்முறைகளின்றியும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →