மகாராஷ்டிரத்தில் மேலும் 2,889 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,18,413 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,181 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 50 பேர் பலியாகியுள்ளனர்.
அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 19,23,187 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 50,944 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய நிலவரப்படி 43,048 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.