முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் இன்று மேலும் 550 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று புதிதாக 550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

கர்நாடகத்தில் இன்று புதிதாக 550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; இன்று புதிதாக ஒரேநாளில் 550 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,37,933 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 644 போ் இன்று வீடு திரும்பினா். இதுவரை மாநிலத்தில் 9,19,503 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 6,202 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 2 போ் இன்று இறந்துள்ளார். இதுவரை 12,209 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments