முகப்பு
இந்தியா

பிரிட்டன் விமானங்களுக்கான தடை பிப்.14 வரை நீட்டிப்பு

புதிய வகை கரோனா தொற்று பரவலின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பிரிட்டன் விமானங்களுக்கான தடை பிப்.14 வரை நீட்டிப்பு
பகிர்:

புதிய வகை கரோனா தொற்று பரவலின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படதைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் வருவதற்கும், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரு நாடுகளுக்குமிடையே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து வந்த பயணிக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதியானது. 

Advertisement

இதனால் பிரிட்டன் விமானங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. இந்நிலையில் புதிய வகை கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments