நாட்டில் இதுவரை 19.50 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,42,306 கரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 19,50,81,079 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,42,306 கரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 19,50,81,079 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
பரவலான பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகயளவிலான பரிசோதனைகள் மூலம் தொற்று பாதித்தவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்தவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் உதவுவதுடன், இறப்பு விகிதத்தை குறைக்கவும் உதவுகிறது." கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது.
அந்தவகையில் நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 7,42,306 லட்சம் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19,50,81,079 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,855 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,20,048-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 20,746 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,03,94,352 -ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றுக்கு மேலும் 163 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,010-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,71,686 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களை மீட்பதில் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும், தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.