நாட்டில் 33.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
நாடு முழுவதும் இதுவரை 33.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 33.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 27,60,345 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 33,57,16,019 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 5,96,16,139 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும், 18 முதல் 44 வயதுடையோருக்கு 9,37,82,652 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10,49,61,999 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 9,24,73,680 தடுப்பூசிகள், முன்களம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4,44,97,688 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.