முகப்பு
இந்தியா

கடத்தியவரை நன்றாக நடத்தினால் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கடத்திய நபர், அடித்துத் துன்புறுத்தவில்லை, கொன்றுவிடுவேன் என்று மிரட்டவில்லை, கடத்தியவரை நன்றாக நடத்தியதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
கடத்தியவரை நன்றாக நடத்தினால் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
பகிர்:


புது தில்லி: கடத்திய நபர், அடித்துத் துன்புறுத்தவில்லை, கொன்றுவிடுவேன் என்று மிரட்டவில்லை, கடத்தியவரை நன்றாக நடத்தியதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 364ஏ-வின் கீழ், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தெலங்கானா மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநர், பள்ளிச் சிறுவனை கடத்தி வைத்துக் கொண்டு, அவனது பெற்றோரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஷோக் பூஷண் மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கடத்தல் வழக்கில், மூன்று அடிப்படை விஷயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அதில் ஒன்று ஒரு நபரை கடத்தி வைத்திருப்பது, கொலை செய்து விடுவதாக மிரட்டுவது அல்லது துன்புறுத்துவது, பணத்தைக் கேட்டு மிரட்டி கடத்தியவரை கொல்வது அல்லது காயப்படுத்துவது போன்றவையாகும். 

இந்த மூன்றும் நிரூபிக்கப்பட்டால்தான் ஒரு குற்றவாளிக்கு தூக்கு அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும், இந்த மூன்றில் ஒன்று நிரூபிக்கப்படாவிட்டாலும் 364 ஏ சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →