முகப்பு
இந்தியா

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

Updated On : 2 ஜூலை, 2021 at 8:44 PM
பகிர்:

கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 
கோவாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,103ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,062ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 2,174 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 285 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,61,867ஆக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் கோவாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். மேலும், கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். சலூன்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகம் / மைதானங்கள் திறக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.