முகப்பு
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா

ஜூலை 14-ல் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை (ஜூலை 14) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்தியா

ஜூலை 14-ல் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை (ஜூலை 14) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை (ஜூலை 14) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கடந்த புதன்கிழமை(ஜூலை 7) மத்திய அமைச்சரவையில்  பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 12 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர். 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை (ஜூலை 14) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின்னர்  நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டமாகும்.

நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாமல், மக்கள் முகக்கவசம் அணியாமல்  கூட்டம் கூட்டமாக செல்வது, தனிமனி இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செல்லும் படங்கள், விடியோக்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அது நம்மில் பலருக்கு பயத்தை தூண்டியுள்ளது.

கரோனா தடுப்புப் பணியை தீவிரப்படுத்துவது, அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது போன்றவை குறித்து 14- ஆம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →