முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

பிரதமர் மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பிரதமர் மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். 
நீட் உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் அப்போது ஆளுநர் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிரதமருடனான சந்திப்பு வழக்கமான ஒன்றுதான் என ஆளுநர் பன்வாரிலால் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமரை ஆளுநர் இன்று சந்தித்தார். அதேசமயம், ஆளுநர் பன்வாரிலால் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில் பிரதமருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
முன்னதாக இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →