கோப்புப்படம் 
இந்தியா

லடாக்கில் சீனா அத்துமீறவில்லை: இந்திய ராணுவம்

கிழக்கு லடாகில் சீனா ராணுவம் அத்துமீறியதாக பரவி வரும் செய்தி உண்மையல்ல என இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

கிழக்கு லடாக்கில் சீனா ராணுவம் அத்துமீறியதாக பரவி வரும் செய்தி உண்மையல்ல என இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சீனா ராணுவம் அத்துமீறியதாக கூறப்படும் செய்தி உண்மையானதல்ல. சர்ச்சைக்குரிய பகுதியை தாண்டி இந்திய ராணுவமும் செல்லவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய-சீனா ராணுவம் எல்லை மீறவில்லை.

எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னைக்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய, சீன படைகளுக்கிடையே மோதல் வெடித்தது. இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்திய, சீன ராணுவப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் தங்கள் படைகளை கடந்த பிப்ரவரியில் விலக்கிக் கொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT