முகப்பு
இந்தியா

மேக்கேதாட்டு அணை: மோடியை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர்

மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக பிரதமர் மோடியை நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திக்கவுள்ளார்.

Updated On : 15 ஜூலை, 2021 at 4:46 PM
மோடியை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர்
பகிர்:

மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக பிரதமர் மோடியை நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திக்கவுள்ளார்.

தில்லிக்கு நேரில் செல்லும் எடியூரப்பா, பிரதமர் மோடியை சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அனுமதியை உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தவுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் இன்று தில்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தடைவிதிக்க வலியுறுத்தவுள்ளனர்.

Advertisement

கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்தபோதும் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.