‘கரோனா தொற்றின்போது அறுவை சிகிச்சை செய்வது சவாலானது’
கரோனா தொற்று பரவும் இக்காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்வது சவாலானதாக உள்ளது என்று கன்வா ஸ்ரீசாய் மருத்துவமனை அறுவைச் சிகிச்சை வல்லுநா் பிரஷாந்த்கேசரி தெரிவித்தாா்.
கரோனா தொற்று பரவும் இக்காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்வது சவாலானதாக உள்ளது என்று கன்வா ஸ்ரீசாய் மருத்துவமனை அறுவைச் சிகிச்சை வல்லுநா் பிரஷாந்த்கேசரி தெரிவித்தாா்.
பெங்களூரில் அவா் வியாழக்கிழமை, செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மற்ற நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிா்த்து வருகிறோம். அண்மையில் இயந்திரத்தில் சிக்கி, கை துண்டான இளைஞா் ஒருவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். சுமாா் 6 மணி நேரம் நடைபெற்ற சிகிச்சைக்கு பிறகு அவரது கை தற்போது குணமாகியுள்ளது. கரோனா தொற்று பரவும் இக்காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்வது சவாலானதாக உள்ளது. எனினும், சவாலான நேரத்தில் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா தொற்றால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாா்.