முகப்பு
இந்தியா

நாளை (ஜூலை 18) கூடுகிறது காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஜூலை 18) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
நாளை (ஜூலை 18) கூடுகிறது காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்
பகிர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஜூலை 18) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் அவசர சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்கள் உள்பட 17 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

இந்நிலையில் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஜூலை 18) காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →