இந்தியா

40 கோடியை நெருங்கும் கரோனா தடுப்பூசி பயனாளிகள்

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது. சனிக்கிழமை காலை 7 மணி வரை மொத்தம் 39,96,95,879 தடுப்பூசிகள் 50,09,914 அமா்வுகளில் போடப்பட்டன. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் 42,12,557 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 3,02,27,792 போ் குணமடைந்துள்ளனா். குணமடைந்தோா் மொத்த வீதம் 97.31 சதவீதமாக உள்ளது. நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 20 நாட்களாக, தினசரி கரோனா பாதிப்பு 50,000-க்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை, 4,24,025 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.36 சதவீதமாகும். வெள்ளிக்கிழமை ஒரு நாளில் 19,98,715 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை 44.20 கோடிக்கும் மேற்பட்ட (44,20,21,954) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT