முகப்பு
இந்தியா

காஷ்மீர் : தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பாவின்  முக்கியத் தளபதி பலி 

காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர்   தாக்குதலில்  லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவர் பலியாயினர். 

Updated On : 19 ஜூலை, 2021 at 11:38 AM
காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர்  தூக்குதலில்  லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவர் பலியாயினர். 
பகிர்:

ஸ்ரீ நகர் : காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர்  தாக்குதலில்  லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவர் பலியாயினர். 

தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெற்கு காஷ்மீரின்  சாதிக் கான் பகுதியில் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் படி காவல்துறையும் பாதுகாப்புப்  படையினரும் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய அதிரடி சோதைனையில் தீவிரவாதிகள் இருவர் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். பின்  சுற்றிவளைக்கப்பட்டதை அறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை மீது தாக்குதலைத் தொடர்ந்தனர். சில நிமிடங்கள் இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த  தாக்குதலில் இறுதியாக இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 

இறந்தவர்களில் ஒருவர் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி அபு அக்ரம் என்றும் இவர் 2017 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்தார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனவும் அதில் சிலர் உயிரிழந்தார்கள் என்றும் காவல்துறையினர்   தெரிவித்தனர்.

Advertisement

மேலும் அவர்கள் பதுங்கியிருந்த அறையிலிருந்து ஏகே ரகத் துப்பாக்கிகளும் சில பத்திரிகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.