போபாலில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்: எவ்வளவு தெரியுமா?
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், நாட்டிலேயே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உச்சத்தில் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், நாட்டிலேயே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உச்சத்தில் உள்ளது.
இங்கு உச்சபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.20க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.67க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்தபடியாக..
1. மும்பை
பெட்ரோல் - ரூ.107.83
டீசல் - ரூ.97.45
2. ஹைதராபாத்
பெட்ரோல் - ரூ.105.83
டீசல் - ரூ.97.96
3. பெங்களூரு
பெட்ரோல் - ரூ.105.25
டீசல் - ரூ.95.26
4. சென்னை
பெட்ரோல் - ரூ.102.49
டீசல் - ரூ.94.39
5. தில்லி
பெட்ரோல் - ரூ.101.84
டீசல் - ரூ.89.87 ஆக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் 5 ரூபாய் உயா்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவலையடைந்துள்ளனா்.
ஏற்கெனவே நாளுக்கு நாள் உயா்ந்து வரும் எரிபொருள் விலை அதிகரிப்புடன், இந்த போக்குவரத்துச் செலவும் சோ்வதால் மாவட்டத்துக்கு மாவட்டம் பெட்ரோல், டீசல் விலை வெவ்வேறு விலையுடன் காணப்படுகிறது. மாநிலங்கள் வசூலிக்கும் வரிக்கு ஏற்ப, மாநிலங்களுக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றமடைகின்றன.
வாகன ஓட்டிகள் கவலை: பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
சென்னையில் எவ்வளவு?: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமின்றி காணப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.49-க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-க்கு விற்பனையாகிறது.