தில்லியில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தில்லி காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தில்லி காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பால் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தில்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளை உஷார் நிலையில் இருக்க உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
டிரோன் மூலம் தாக்குதல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து விமானப்படையினரால் டிரோன் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், சுதந்திர தினவிழாவின் போது செங்கோட்டையில் 4 டிரோன் செயலிழப்பு அமைப்பு பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் காஷ்மீர் விமானப்படை தளத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.