எடியூரப்பா ராஜிநாமாவால் எந்தப் பலனுமில்லை: சித்தராமையா
எடியூரப்பா ராஜிநாமா செய்ததால் மாநில மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்தியாஎடியூரப்பா ராஜிநாமாவால் எந்தப் பலனுமில்லை: சித்தராமையா
எடியூரப்பா ராஜிநாமா செய்ததால் மாநில மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா ராஜிநாமா செய்ததால் மாநில மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஊழலில் மூழ்கிய முதல்வர் ராஜிநாமா செய்த பிறகு அதே கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவதால், கர்நாடக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சித்தராமையா பேசியதாவது,
''எடியூரப்பா பதவி விலகியதால் எந்த பலனும் உண்டாகப்போவதில்லை. மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் இருக்கிறது. இந்த ஆட்சியில் ஒரு ஊழல் முதல்வர் பதவி விலகியதும், அந்த பதவிக்கு நியமிக்கப்படும் மற்றொரு நபரும் ஊழல் செய்பவாராகவே இருப்பார். பாஜக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் மாநிலத்தின் நலனுக்காக அவர்களால் உழைக்க இயலாது'' என்று கூறினார்.